புதிய பொறுப்பாளர்கள் தேர்வு..
திருச்சி வளர்ச்சி குழும ஆலோசனை கூட்டம்
சேவை சங்கங்கள், சமூக அலுவலர்கள் பங்கேற்பு.
திருச்சிராப்பள்ளி
வளர்ச்சிக் குழுமம் (திருச்சி மாவட்ட சேவை சங்கங்கள் & சமூக ஆர்வலர் கூட்டமைப்பு)
ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக
சுப.சோமு,
ஜெயகர்ணா ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
மூத்த சமூக ஆர்வலர் சகுந்தலா சீனிவாசன், நீலமேகம், விவேகானந்தன், பிளட் ஷாம், பால்குணா, ஹோப் தினேஷ் காந்தி மார்க்கெட் கமலக்கண்ணன், சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் தலைவராக
வழக்கறிஞர்
திருச்சி என்.எஸ்.திலீப்,
செயலாளராக யோகா விஜயகுமார்,
பொருளாளராக அய்யாரப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
சுமார் 200 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திருச்சி என்.எஸ்.திலீப் பேசுகையில்
திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்வதே திருச்சிராப்பள்ளி வளர்ச்சி
குழுமத்தின் செயல்பாடுகள் ஆகும் என்றார்.
முன்னதாக பொருளாளர் அய்யாரப்பன் வரவேற்றார். முடிவில் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் திருச்சியின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் 35 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.