அமைச்சர் மகேஷ் மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூர் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் புகார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூறு பரப்பிய தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் காவல்துறையிடம் புகார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின்படி கிழக்குறிச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையம் நெல் கொள்முதல் செய்யும் பணி அரசு விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் நெல் கொள்முதல் செய்வது இல்லை எனவும் நெல் கொள்முதல் செய்வதற்கு கமிஷனாக சில தொகைகள் வசூலிக்கப்படுவதாகவும் விவசாயி அல்லாத ஒரு தனி நபரின் பேட்டியை ஒளிபரப்பி அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது. அந்த தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நபர் மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கீழக்குறிச்சி கிராமத்தைச் சார்ந்த விவசாயிகள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜோசப் என்பவர் விவசாயி அல்ல அவர் ஒரு தவறான தகவலை தனியார் ஊடகத்தின் வாயிலாக பரப்பி இருக்கிறார் எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவெறும்பூர் காவல்துறை ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அந்த புகாரில் குறிப்பிட்ட தினத்தில் நெல் கொள்முதல் பணி நடைபெற்று இருப்பதை நெல் கொள்முதல் செய்யும் பணியில் உள்ளோர் குறிப்பிட்ட அந்த தினத்தில் 3000 மேற்பட்ட மூட்டைகள் நெல் பிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்
. தவறான தகவலின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளரை உடனடியாக அந்த நெல் கொள்முதல் நிலையத்தில் பணி அமர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.