ஆர்கே.அகாடமிக் சார்பில் 5-வது பட்டமளிப்பு விழா.
சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருது.
அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆர்கே அகாடமிக் சிறந்த மாணவ, மாணவிகளுக்கான விருது வழங்கி வருகிறது.
அதேபோல் இந்த 2022ம் ஆண்டிற்கான பட்டங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சி.நித்தியானந்தம் , பைஜூ பாபு, எஸ்.பாபு, டாக்டர் வி.சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இதில் ஆர்கே.அகாடமிக்கை சார்ந்த கிளை நிர்வாகிகள் ஏ.ஜெரால்டு, மார்தாண்டம், எஸ்.கமல், தஞ்சாவூர், டாக்டர் எம்.தேவி, தேனி, ஹீலர்.கீதாராணி திருச்சி, ஒசூர் குமார்,லதா பெங்களூர் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்கே.அகாடமிக் மற்றும் டிவைன் ஹீலிங் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் கு.ரெத்தினகுமார் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி நன்றி கூறினார்.