திருச்சி
சமூக ஆர்வலர்களுக்கு
விருது.
சூரியனார் கோவில் ஆதீனம் வழங்கினார்.
சூரியனார் கோவில் 28வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிவஞான கொழு கண்காட்சி திருச்சி தொட்டியம் பாலசமுத்திரம் சுந்தரமூர்த்தி நாயனார் திருமடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்
திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் நீர் நிலையை பாதுகாக்க சேவையாற்றி வரும் தண்ணீர் அமைப்பு கே.சி.எநீலமேகம், ஆர்.கே.ராஜா, அக்னி சிறகுகள் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு சமூக சேவா ரத்தினம் விருதும்,
ஆதரவற்ற அனாதை பிரேதங்களை மனைவி மகளுடன் இணைந்து நல்லடக்க பணியை மேற்கொண்டு வரும்
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு
சிறந்த மனிதநேய விருதும் வழங்கி ஆசீர்வதித்தார்.