இந்திய ஹேண்ட்பால் ஃபெடரேஷன், தி தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷன், திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேசன் மற்றும் எஸ்பிஐஓஏ பள்ளி ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் நேற்று 26ம் தேதி முதல் வருகிற 30ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும்
44வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டியை காவல்துறை உதவி ஆணையர் சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய ஹேண்ட்பால் ஃபெடரேஷன் செக்ரட்டரி ஜெனரல் ஸ்ரீ ப்ரித்பால் சிங் சலுஜா, பனானா லீப் ஹோட்டல் மேலாண்மை இயக்குனர் மனோகரன், பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆர் பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷன் பொதுச் செயலாளர் கருணாகரன் சிறப்பாக செய்திருந்தார்.
நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் உத்தரபிரதேச அணியை தமிழக அணி 32-11 என்ற புள்ளி கணக்கில் வென்றது