
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பறை இசைப்பயிற்சி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட திரைக்கலைஞர்கள் கிளைக்கூட்டம் தில்லைநகர் துலைட் டான்ஸ் ஸ்டுடியோ அரங்கில் கிளைத் தலைவர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் திரைக்கலைஞர் சுரேந்தரன் ஜோ செம்பி திரைப்படத்தை விமர்சனம் செய்து சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ் உலகின் இளைய மொழியான சினிமா மொழி சமூகத்தில் உண்டாக்கி வரும் தாக்கத்தையும் திரைத் துறைக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திரை விருதுகள், திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பள்ளி குறித்து பேசினார்.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட அனைத்துக்கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி புகைப்பட போட்டி நடத்துவது என்றும் அதன் ஒருங்கிணைப்பாளராக விஜய்வர்மா செயல்படுவார் என்றும் தொடர்ந்து பல வகையான புகைப்படக்கலை, நடனக் கலை போட்டிகள் நடத்துவது, பறை இசைப்பயிற்சி வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நடனக் கலைஞர்கள் பரத், ஹரி, கார்த்தி, மணிகண்டன், அபிஷேக் உட்பட பலர் கலந்து கெண்டனர். முடிவில் கிளைப் பொருளாளர் சந்துரு நன்றி கூறினார்.

