*போனஸ் வழங்க கோரிக்கை: செங்கோட்டையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
*போனஸ் வழங்க கோரிக்கை: செங்கோட்டையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
*போனஸ் வழங்க கோரிக்கை: செங்கோட்டையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்*
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையம் அருகில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் சாபு தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் ரபீக் கோரிக்கை உரையாற்றினார்.
ரயில்வே தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதவி கோட்டத் தலைவா் சுப்பையா, உதவி கோட்டச் செயலாளா்கள் சீதாராமன், ஜூலி, திருநெல்வேலி கிளைச் செயலாளா் ஐயப்பன், திருநெல்வேலி கிளை உதவி தலைவா் தமிழரசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். செங்கோட்டை கிளை உதவி தலைவா் அகிலன் நன்றி கூறினார்.