எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனை
அஇஅதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106.வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்..
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வது குறித்தும்,
பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை கூட்டமானது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் எம்அருணகிரி தலைமை ஏற்று நடத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகரக் கழக செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், மற்றும் சார்பு அணி செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.