திருச்சி மாவட்டத்தில்
அனுமதி இன்றி வாரிசு, துணிவு படங்களை திரையிட்ட உரிமையாளர்கள் மீது வழக்கு.
நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித்குமார் நடித்த துணிவு போன்ற திரைப்படங்கள் நேற்றைய தினம் ஒரே நாளில் உலகம் முழுவதும் வெளியானது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த திரைப்படத்தினை இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த கொண்டாட்டத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு சில தியேட்டர்களில் அனுமதியின்றி அந்த திரைப்படம் வெளியான தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மணப்பாறையில் துணி மற்றும் வாரிசு திரைப்படங்களை வெளியிட்ட இரண்டு தியேட்டர் உரிமையாளர்கள் மீதும், காட்டுப்புத்தூரில் வாரிசு திரைப்படம் வெளியிட்ட அந்த தியேட்டர் உரிமையாளர் மீதும்,
துறையூரில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை வெளியிட்ட 2 தியேட்டர் அதிபர்கள் மீதும்
முசிறியில் துணி படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று லால்குடியில் வாரிசு, பெல் காவல் நிலைய எல்லை பகுதியில் வாரிசு, திருவெறும்பூரில் துணிவு, ராம்ஜி நகரில் துணி ஆகிய திரைப்படங்களை வெளியிட்ட மொத்தம் 10 திரையரங்கு உரிமையாளர்கள் மீது கிராம அலுவலர்கள் புகார் அளித்தனர்.