Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா: நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு.

0

'- Advertisement -

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து – ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.

இந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. டிசம்பர் 23ம் தேதி முதல் 01ஆம் தேதி வரை பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்றது.

அதேபோல கடந்த 02ஆம் தேதி முதல் 12-ம் தேதி நேற்று வரை ராப்பத்து விழா பத்து நாட்கள் திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது.

முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு 02 -ம்தேதி அதிகாலை 4.45 மணிக்கு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி
பெருந்திருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.

21 நாள் மொத்த திருவிழாவில் 14,45,289 பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர் – இதில் அதிகபட்சமாக சொர்கவாசல் அன்று 2.16 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவில் இந்த ஆண்டு மூலவர் பெரிய
பெருமாளை தரிசனம் செய்வதற்காக கட்டண சீட்டு விற்பனை மட்டும் 1 கோடியே 92
லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது.

இதற்கு முன்னதாக ஸ்ரீரங்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கோடியே 48 லட்சம்
ரூபாய்க்கு விற்பனை ஆகி இருந்தது. ஒரு கோடியே 92 லட்சம் வரை கட்டண சீட்டு
விற்பனை ஆனது இதுவே முதல் முறை ஆகும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.