திருச்சி என்.ஐ.டி.யில்
பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கம்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச
கருத்தரங்கமும், மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல்
திறன் போட்டியும் தொடங்கியது.
அதனை சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மை ஆலோசனை குழு
தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன முன்னாள் கூடுதல் செயலாளருமான
திருப்புகழ். ஐ.ஏ.எஸ்., தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினார்.
இக்கருத்தரங்கு நாளை( 11ஆம் தேதி) நிறைவடையவுள்ளது.
அதில் இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல்
கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பேரிடர் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை, தீர்ப்பதற்கான
வழிமுறைகளை 28 மணி நேரத்தில் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான
அறிவாற்றல் திறன் போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை
சேர்ந்த 150 மாணவர்கள் 58 அணியாக பங்கேற்றுள்ளனர்.