திருச்சி செயின்ட் மேரிஸ் பள்ளியில் கதை சொல்லும் நிகழ்ச்சி.வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் பரிசுகளை வழங்கினார்.
திருச்சி பொன்மலைப்பட்டியில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரிஸ் பள்ளியில் தனித்தனியாக ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் எடுத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் குழந்தைகளின் பொது அறிவு வளர்ச்சிக்கு மேலும் குழந்தைகளின் தனித்திறமையை வளர்க்கும் விதத்தில் அனைத்து வகையிலும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வகையில் இன்று பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் மற்றும் பள்ளி முதல்வர் கவிதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளையும் பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் பாராட்டினார்.




