திருச்சி என் ஐ டி யில்
பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதே
அளவிலான கருத்தரங்கு.
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில், “அவசர கால சேவை மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான அறிவார்ந்த தொழில் நுட்பத் தீர்வு என்னும் தலைப்பிலான சர்வதேச அளவிலான கருத்தரங்கு ஜனவரி 9 முதல் 11 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இது குறித்து திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகம் அறிவித்திருப்பது ;
தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் அவசர கால தொழில் நுட்ப சேவை மற்றும் திருவனந்தபுரம் உதவி சிறப்பு மையம் மற்றும் கணிணி வளர்ச்சி மற்றும் மேம்பாடு மையம் சார்பில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கு, பேரிடர் காலங்களில் துரித தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில் நுட்பம் மூலமாக நிலையான தீர்வு காணும் வகையில் நாடு முழுவதிலிமிருந்து மக்கள் பேரிடர் காலங்களில் பேரிடர் மேலாண்மை மையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி, கைபேசி, கணிணி வாயிலாகவும், மின் அஞ்சல் மற்றும் அவசர கால கருவி மற்றும் 112 தேசிய கைபேசி, செயலி வாயிலாக தொடர்பு கொள்ள ஏதுவான பேரிடர் மேலாண்மை மையத்திற்கான மென்பொருள் வடிவமைப்பதை மையக் கருவாக கொண்டு நடைபெறுகிறது.
கருத்தரங்கின் முக்கிய நோக்கம் பேரிடர் காலத்தில் மக்கள், உயிரினங்கள் மற்றும் உடமைகளை காப்பாற்றுவதற்கு முன்னுள்ள சவால்கள் என்னென்ன, அவற்றிற்கு தொழில் நுட்ப வாயிலாக எவ்வெவ்வாறு தீர்வு காண்பது, அனைத்து தகவல் அமைப்புகளை எவ்வாறு ஒன்றிணைப்பது, மிகவும் குறுகிய நேரத்தில் மீட்பு நடவடிக்கை பணிகளை சம்பவ இடத்தில் தொடங்குவது என பல்வேறு நிலைகளை பற்றி அறிஞர்கள், வல்லுநர்கள் இடையே ஒரு கருத்துப் பரிமாற்ற களத்தை அமைப்பதே ஆகும்.
கருத்தரங்கில் 30 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் செயற்கை நுண்ணறிவு. பல்வேறு தலைப்புகளில் வெளிப்படுகின்றன. கருத்தரங்கை திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக இயக்குநர் ஜி. அகிலா முன்னிலையில், சென்னை பெருவெள்ள தடுப்பு ஆலோசனைக் குழுவின் தலைவரும், உள் துறையின் பேரிடர் மேலாண்மை குழுவின் முன்னாள் ஆலோசகருமான முனைவர் வெ. திருப்புகழ் (ஓய்வு) தொடங்கி வைக்கிறார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை நிபுணர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்கை பற்றி மேலும் தகவல்களை https//iserdm2023.nitt.edu/ என்ற இணைய தள முகவரியின் மூலம் அறியலாம்.
கருத்தரங்கின் ஒரு பகுதியாக 28 மணி நேர தொடர் நிகழ்நிரலோட்டம் ஜனவரி 9 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் தற்போதைய இளங்கலை பட்ட வகுப்புகளில் படிக்கும் அனைத்துத் துறை மாணவர்களும் குழுவாக கலந்து கொள்ளலாம்.
ஒரு குழுவிற்கு இரண்டு மாணவர்கள் பேரிடர் மேலாண்மையில் உள்ள ஏதேனும் சவால் ஒன்றை தெரிவு செய்து, அதற்கான தீர்வாக, செயற்கை நுண்ணறிவு, தகவல்அறிவியல் மற்றும் இணையதள பாதுகாப்பு ஆகிய எண்ணோட்டங்களில் செயலிகளை உருவாக்கலாம். வெற்றி பெறும் குழுக்களுக்கு ரூ. 25,000 பரிசுத்தொகையாக அளிக்கப்படும். தொடர் நிகழ்நிரலோட்டம், திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக வளாகத்தில் நேரடியாக நடத்தப்படுகிறது.
போட்டியை பற்றிய மேலும் தகவல்கள் https//nit-hackathon.datanetlix.com/ என்ற இணைய தள முகவரியில் அறியலாம்.

