Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாகனங்கள் ஏலம் திருச்சி காவல்துறை அறிவிப்பு

வாகனங்கள் ஏலம் திருச்சி காவல்துறை அறிவிப்பு

0

*அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் – திருச்சி காவல்துறை அறிவிப்பு!*

திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 106 வாகனங்களை அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இந்த 106 வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி மாவட்டம் அவர்களால் மேற்படி 106 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 23.10.2020 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், ஏலம் நடைபெறும் நாள் 23.10.2020 அன்று காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை ரூ.25,000/- முன் வைப்பு தொகை செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து அவர்களுக்குரிய டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். காலை 11.00 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும், ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் GST தொகையினையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி முகக்கவசம், கையுறை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.