திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் குழு மாணவர்களை வானவியல் துறையில் உயர்கல்வி தொடருவதற்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த ஆராய்ச்சி ஆலோசகர் சைவ சித்தாந்த ரத்தின முனைவர் ரத்தினம் சந்திரமோகன் இவ்விழாவை தொடங்கி வைத்தார்.
அவர் உரையின் போது தமிழ் சங்க இலக்கியத்தில் உள்ள வானியல் சார்ந்த குறிப்புகளை மேற்கோள் காட்டினார். ‘இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர், பேராசிரியர் டி.கே.வி.ராஜன். ‘வானியல் கணக்கீட்டின் அடிப்படையில் பண்டைய இந்திய இலக்கியத்தின் காலவரிசை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர் தேசியக் கல்லூரியின் இயற்பியல் துறைக்கு Sky watcher- India எனும்
தொலைநோக்கியை வழங்கினார். தமிழ்நாடு அஸ்ட்ரானிக்கல் சொசைட்டியை சேர்ந்த சாந்தி வானியல் துறையில் பெண்களின் பங்கேற்பை குறித்து
உரையாற்றினார்.
துவக்க விழாவின்போது முனைவர் A1. ரவிச்சந்திரன் வானியல் குழு துவங்கிய நோக்கத்தை பற்றி கூறினார்.
தேசியக் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் முனைவர் எஸ் பாரி பற்றும் இணை பேராசிரியர் A1 ரவிச்சந்திரன் மற்றும் உதவி பேராசிரியர் முனைவர் ஆர் ராமசாமி சிறப்பு விருந்தினருக்கு நினைவுச் சின்னம் வழங்கி பெருமைப்படுத்தினர்.
கி ராதா மற்றும் வீ. ஜிஷ்ணு துவக்க விழாவை தொகுத்து வழங்கினர். பாஸ்கர் விழாவிற்கு துவக்க உரையாற்றினார்.ரா.இனியன்,எஸ். சுபாஷ், சந்திரபோஸ் மற்றும் வி. பரிவர்த்தனா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தனர். வேணு சுப்பிரமணியன் விழாவிற்கு முடிவுரை ஆற்றினார். இயற்பியல் துறையின் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.