திருச்சியில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் மீது வழக்கு.கோர்ட்டில் ஆஜரான நிர்வாகிகள்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கடந்த
27.6. 22 விலைவாசி உயர்வு திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் காவல்துறை அனுமதி இன்றியும், பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்பாட்டம் நடத்தியதாக கோட்டை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சி ஜெ.எம். 1. நீதிமன்றத்தில் ஆஜராக மாவட்ட ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அவை தலைவர் அய்யப்பன்,மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் , மலைகோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்.
எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளரும்,
சிந்தாமணி கூட்டுறவு தலைவருமான சகாதேவ்பாண்டி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துகுமார் உட்பட அதிமுகவினர் வருகை தந்தனர்.
மனுக்களை விசாரித்த பின் மீண்டும் 6.2.23-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடுவர் சுபாஷினி உத்திரவிட்டார்.