Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வரும் முதல்வர் காவேரி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்ய மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் வலியுறுத்தல்.

0

'- Advertisement -

 

திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் காவிரி மேம்பால பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வலியுறுத்தல்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் தொலைநோக்கு திட்டத்தால் 1976-ஆம் ஆண்டு திருச்சிக்கு கிடைத்த மாபெரும் வரபிரசாதமான திருச்சி காவிரி மேம்பாலம். தந்தை உருவாக்கிய இந்த பாலத்தை சீரமைக்க சுமார் ஏழு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் தற்போதைய தமிழக முதல்வர்.

திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் அதிமுக்கியத்துவமான இந்த பாலப்பணிகள் மிக சொற்ப பணியாளர்களை கொண்டு ஆமை வேகத்தில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளது. ஆனால் இதனை நெடுஞ்சாலைதுறை மறுத்து வந்தாலும். திட்டமிட்ட காலத்தில் இந்த மேம்பால பணிகள் முடிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

மேலும் இந்த காவிரி மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசலில் திருச்சி மாநகரம் கடந்த இரண்டு மாதமாக சிக்கி தவிக்கிறது.

மேலும் பூலோக வைகுண்டமாம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதேசி விழா தொடங்கியாகிவிட்டது. இந்த திருவிழாவிற்கு மட்டும் உலகம் முழுவதுமிலிருந்து சுமார் 25-இலட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என கணிக்கப்படுகிறது.

எனவே மேற்படி மராமத்து பணி நடைபெறும் காவிரி மேம்பாலத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

எனவே திருச்சிக்கு வரும் 29ந் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் அவர்களோ அல்லது பொதுபணித்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களோ மேற்படி காவிரி மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் குறிப்பிட்ட கால நிர்ணயித்திற்கு முன்பாகவே காவிரி மேம்பால பணிகளை முடிக்க தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்

என வழக்கறிஞர் கிஷோர்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.