பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நரேந்திர மோடியின் மத்திய அரசு நலத்திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் உறையூர் மண்டல் நிர்வாகிகள் முலம் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஆயுஷ்மான் பாரத் (மருத்துவ காப்பீட்டு திட்டம், ஈஷ்ரம் (அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம்) பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ், 10வது வார்டு தலைவர், 8வது வார்டு தலைவர் நிக்ஸன்,கிளைத் தலைவர் சேகர் ஆகியோர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது.
மத்திய அரசின் இலவச காப்பீடு திட்டங்களை சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் கே.டி.தினகரன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைப்புசாரா மாநில செயலாளர் சீனிவாசன்,மாவட்ட பொருளாளர் செல்லதுரை.தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் புகழ்.மண்டல் துணை தலைவி சசிகலா, கீதா ராணி ஜீவிதா, சங்கர், சுகுமாரி. மண்டல் பொதுச் செயலாளர் ராஜ்குமார் ரவிச்சந்திரன் தியாகு ரமேஷ் பட்டாசு கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளை 10 வார்டு தலைவர் சதீஷ் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்