எம்ஜிஆரின் 35 வது நினைவு நாள்: திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மரியாதை செலுத்தி அன்னதானம்.
அதிமுக நிறுவன தலைவர் எம் ஜி ஆரின் 35.வது நினைவு நாள் அனுசரிப்பு.
_திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்
எம்.ஜி.ஆரின் நினைவுநாளினை முன்னிட்டு திருவெறும்பூர் பகுதி பஸ் ஸ்டாண்ட் அருகில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு காலை உணவு அன்னதானமும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம் அவர்கள் மேற்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் திருவரம்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், .பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, ராஜமணிகண்டன், சுரேஷ்குமார், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.