திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை.
கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி முதற்கட்டமாக தமிழகத்தில் ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது – இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு நடத்தப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,
அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா,மருத்துவமனை கண்காணிப்பாளர் எட்வினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை தவிர
மணப்பாறை அரசு மருத்துவமனை,இனாம் குளத்தூர்,இராமலிங்கம் காலனி மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை என ஐந்து இடங்களில் இன்று இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு இடத்திலும் 25 பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்வு நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவை பொறுத்து அடுத்த கட்டமாக அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்தார்.