திருச்சியில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வட மாநில கொள்ளைகளை மடக்கி பிடித்த காவலர்களை பாராட்டும் பொதுமக்கள்
திருச்சி கருமண்டபம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து சுமார்30 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளரின் மகள் திருமணம் சில நாட்களில் நடக்க இருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பல் யார் என்பது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகில் வட மாநிலத்தை சேர்ந்த 4 குடும்பத்தினர் வெளி மாநிலத்திலிருந்து திருச்சி வந்து இறங்கி உள்ளனர் என்பதும், அந்த வட மாநிலத்தவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.
போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வட மாநிலத்தினர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அப்பொழுது தனிப் படையினர் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி பிடித்தனர். இந்த சம்பவத்தில் தனிப்படை போலீசாருக்கு காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து பிடிபட்ட நான்கு வட மாநிலத் குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது அதில் உள்ள நான்கு பேரும் முன்னுக்கு முரணாக தகவல்களை தெரிவித்தனர்.இதையடுத்து அந்த நான்கு பேரையும் பிடித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நான்கு பேரும் வட மாநிலமான ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் அண்மையில் கருமண்டபத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில் இந்த நான்கு பேரும் சேர்ந்து தான் கொள்ளையடித்து உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.மேலும் தனிப்படை போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
இவர்களுடன் வந்துள்ள பெண்கள், முதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு விட்டு அதை கொள்ளையர்களிடம் தகவல் கொடுத்து கொள்ளையடித்து வந்ததும் மேலும் கொள்ளை அடித்த உடன் இவர்கள் வட மாநிலத்திற்கு சென்று விடுவதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர்கள் மீது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளதால் திருச்சி காவல்துறையினர் பிடித்த இந்த நபர்களை விசாரிக்க பல மாவட்ட காவல் துறையினர் திருச்சி வந்து முகாமிட்டுள்ளனர்.இந்த கொள்ளை கும்பல் முதலில் வீட்டை நோட்டமிட்டு விட்டு பிறகு வீட்டில் நகை பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுவிட்டு பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் தமிழகம் வந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வருந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது திருச்சியில் பெரும் பரபரப்பாக உள்ளது. மேலும் இந்த சம்பவம் தமிழ் திரைப்படமான தீரன் படத்தில் வரும் சம்பவத்தை போல இருபத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும் திருச்சியில் உள்ள மக்கள் இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இந்தப் பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் செய்துள்ள சிறப்பான பணிக்கு பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் உயிரை துச்சமாக மதித்து கொள்ளையர்கள் பிடிக்கும் நோக்கில் செயல்பட்ட காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மற்ற காவலர்கள் இதுபோன்று செயல்பட ஆர்வம் காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக இவர்களுக்கு பாராட்டு பொதுமக்களிடமிருந்து குவிந்து வருகிறது.