நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள்
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மறியல்.
திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் வெள்ளம் போல் வெளியேறியது. அதனால் சுப்ரமணியபுரம் முதல் ஏர்போர்ட் வரை தண்ணீர் ஒரு மாத காலம் வரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47-வது வார்டில் மாநகராட்சி உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து 47வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓரங்களில் செல்லும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியதால் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது.
மாநகராட்சி அதிகாரிகளுக்கும் – நெடுஞ்சாலை துறையினருக்கும் உரிய புரிதல் இல்லாமலேயே இருப்பதால் அடிக்கடி சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டுகிறேன் என்று குடிநீர் குழாய்களை உடைத்து விடுவதால் ஆறு மாத காலமாக டேங்கர் லாரியை கொண்டு தண்ணீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து தொடர்ந்து செயலில் ஈடுபட்டு வருகின்றனர். உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்து தருமாறு கேட்டாலும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்வதே இல்லை.இதனால் சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஏர்போர்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கூறிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று பொதுமக்களுடன் இணைந்து இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.