திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட இணை செயலாளர் தௌலத் உசேன் கான், துணை தலைவர் சையது சுல்தான் மக்தூம் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்ட தலைவர் சிராஜுதீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில்
ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும்,
ஒழுங்கு நடவடிக்கைக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டோர்/தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டு ஓய்வு பெற அனுமதிக்கப்படாதோர் ஆகியோருக்கு நீதிமன்ற தீர்ப்புகள்/அரசனைகளின் அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை அனுமதித்திடல் வேண்டும்.
‘ஒன்றிய பணி ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட பலன் குறித்த அரசாணையை தாமதம் இன்றி அமுல்படுத்த வேண்டும்.இவர்களுக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டையை உடன் வழங்க வேண்டும்
உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் முருகேசன் நிறைவுரையாற்ற முடிவில் மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.