பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பிறந்தநாள் நிறைவு விழா.
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையிலும் மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையிலும் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் உள்ள கொடிமரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வர்ண கொடியை வண்ணை அரங்கநாதன்
ஏற்றினார்.
இந்நிகழ்வில்
தலைமை செயற்குழு உறுப்பினர்
சபியுல்லா மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து சேர்மன்கள் உட்பட பலர் சிறப்பித்தனர்.