Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை.

0

பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித்திட்டம் செயல்படுத்த ரூ 2500 கோடி ஒதுக்கீடு
அரியமங்கலம் திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

திருச்சி மாநகர் அரியமங்கலம் பகுதி திமுக சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அரியமங்கலத்தில் நடந்தது.
பொதுக்கூட்டத்திற்கு கிழக்கு மாநகர கழக செயலாளரும், திருச்சி மண்டலம் 3-ன் தலைவருமான மதிவாணன் தலைமை வகித்தார்.
திமுக அரியமங்கலம் பகுதி வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் ரங்கநாதன், கதிர்வேல், சுரேஷ், ஆனந்த், முருகானந்தம், சிவசக்தி, கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்குமாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு முதன் முதலில் வந்த பொழுது என்னை எப்படி மக்கள் தம்பி, அண்ணா, பிள்ளை என்று அழைத்தார்களோ, அதை நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
2014 ஆம் ஆண்டு பேராசிரியர் இந்த பகுதியில் எனக்காக வாக்கு சேகரித்தார். அவர் 9 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு பட்டார். 80 ஆண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர், 43 ஆண்டுகள் திமுகவின் பொது செயலாளராக இருந்தார். 1942 ஆம் ஆண்டு கலைஞரை சந்தித்தது முதல் அவருடன் நட்புடன் இருந்தவர்.
13 ஆண்டுகள் பேராசிரியராக வேலை பார்த்தவர். மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டு முறை பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்த ஆலமரத்தில் சிறு துளியாக நான் தற்பொழுது இங்கு உள்ளேன்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளி அறிவித்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பேராசிரியர். கலைஞர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என அறிவித்தபோது நிதியமைச்சராக இருந்தவர் பேராசிரியர் .

பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வி திட்டம் செயல்படுத்த ரூபாய் 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதில் இந்த ஆண்டு 1400 கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை நமதே நாற்பதும் நமதே என உறுதிமொழி ஏற்பு கூட்டமாக இருக்க வேண்டும். அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோர் நிழற்குடைவழியில் தான் தற்போதைய முதல்வர் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் தலைமைக் கழக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சேகரன், பகுதி செயலாளர்கள்
கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி.விஜயகுமார், மோகன், சிவகுமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர், கருணாநிதி, கங்காதரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தனசேகர் சாந்தகுமாரி சாலமன், , கயல்விழி, ஞான தீபம், மணிமேகலை உட்பட திமுகவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் 37வது வார்டு வட்ட செயலாளர் தவசீலன், விஸ்வநாதன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.