விடியா திமுக அரசை கண்டித்து பூவாளுர்,கூத்தப்பார் பேரூராட்சிகளில் மாவட்ட செயலாளர் குமார் கண்டன பேருரை.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி தொகுதி பூவாளூர் பேரூராட்சி
விடிய திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு,
பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு,
மின் கட்டண உயர்வு, மற்றும் அனைத்து பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்
,
அம்மா அரசின் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியதை கண்டித்து, கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றாத செயலை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கண்டன பேருரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.பாலன்,
சுப்பர் நடேசன்,அசோகன்,ஜெயசீலன்,
விக்னேஷ்,பிரதீப்,
விஜயா,அன்பில் தர்மதுரை,ரீனா செந்தில்,ஜெகதீசன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக கூத்தப்பார் பேரூராட்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முத்துக்குமார் தலைமை ஏற்றார்.
செயலாளர்கள் ராவணன்,கார்த்தி பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், தண்டபாணி, பாஸ்கர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் பாஸ்கர்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிமுக ஒன்றிய பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.