Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா.

0

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நேற்று 15.12.2022 (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

அவர் தலைமை உரையாற்றிய போது மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று தங்கள் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி நேர்மையுடனும் பெருமையுடனும் சமூகத்திற்கு சேவை செய்ய கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்ததற்காக மாணவர்களுக்கு அவர் நன்றி கூறினார்.

பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், துணை வேந்தர் டாக்டர் ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.

மாணவர்கள் தங்கள் தகவல் தொடர்பு திறன், சரியான அணுகுமுறை, அர்ப்பணிப்பு, இரக்கம் மற்றும் மக்கள் நலனுக்காக பணியாற்றுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

வெள்ளை அங்கி விழாவின் போது, குறிப்பாக முதல் தலைமுறை மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்காக நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

மாணவர் நலன் மற்றும் உடற்கூறியியல் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் புதிதாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ மாணவர்களை ஹிப்போகிரடிக் உறுதிமொழி ஏற்கச் செய்தார்.

முன்னதாக சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புல முதல்வர் டாக்டர். துளசி மாணவர்களை வரவேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலாளர் நீலராஜ், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். ரவிச்சந்திரன், புல முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.