சுசீந்திரன் இயக்கும் படம்.. சிம்பு பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? படக்குழு தகவல்
சுசீந்திரன் இயக்கும் படம்.. சிம்பு பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? படக்குழு தகவல்
சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சிம்பு. இது குறுகிய கால படம் என்று கூறப்படுகிறது.
கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங், திண்டுக்கல்லில் சில நாட்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது.
சிம்பு ஜோடியாக 30 நாட்களில் படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதை, ஜீரோ, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ஆகி இருக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். சிம்பு ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார். முன்னா மைக்கேல் இவர், லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர். படத்துக்கு இசை அமைப்பாளராக, எஸ்.எஸ். தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, சிம்பு நடித்துள்ள ஒஸ்தி, வாலு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். விஜயதசமி அன்று இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று படக்குழு வெளியிடுகிறது. இதில் சிம்பு ஸ்லிம்மாக, வேற லெவலில் இருப்பார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிம்பு ரசிகர்கள் இப்போதே அதை கொண்டாட ஆர்வமாக இருக்கின்றனர்.