Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நம்மாழ்வார் மோட்சம் ……

0

ஸ்ரீரங்;கம் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார்
மோட்சம் நேற்று நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 25- ந்தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான கடந்த 31-ந் தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8ம் நாளான ஜனவரி 1- ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

10ம் நாளான நேற்று முன் தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பெருமாள் நேற்று முன் தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று காலை 5 மணி முதல் காலை 6 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.

நம்மாழ்வார்மோட்சம்
பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.
பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்தாக தெரிவித்தனர்.

அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூர் திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர்; காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் இன்று (5-ந்தேதி) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது.
அதன் பின் அதிகாலை 2மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறை நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஸ்ரீரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும்.
அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

தொடர்ந்து இன்று(5-ந்தேதி) முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் 10-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.