திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து 9,13,14 தேதிகளில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்.குமார் தலைமை நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 9,13,14 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் குறித்து
ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1 :
விடியா திமுக அரசின் 18 மாத
கால ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மகளிருக்கு பாதுகாப்பின்மை, ஆன்லைன் ரம்மி தடையின்மை, போதைபொருள் சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டிவதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடியா தி.மு.க. அரசை கட்டணங்களை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தி 9.12.2022 அன்று பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும், 14.12.2022 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து கழக நிர்வாகிகள், பொதுமக்களை ஒன்று திரட்டி பிரம்மாண்டமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 :
விடியா திமுக அரசின் அவல நிலையை ஒவ்வொரு வீடுதோறும் கழக நிர்வாகிகளுடன் சென்று துண்டு பிரசுரம் கொடுத்து பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், திருவரம்பூர் பகுதி செயலாளர் பாஸ்கரன்,மாவட்ட இணை செயலாளர் சாந்தி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.