திருச்சியில்
பெண்களுக்கான உடல் நல விழிப்புணர்வு முகாம்.
திருச்சியில் பெண்களுக்கான உடல்நலவிழிப்புணர்வு முகாம் மில்லத் பள்ளி, ஜாமியா பள்ளி,முகம்மதியா பள்ளி,ஜதீத் மதினா பள்ளி ஆகிய 4 பள்ளி நிர்வாகங்கள் சார்பில் நடைபெற்றது.
திருச்சி காமராஜ் நகர் ஜாகிர் உசேன் தெருவில் நடந்த விழிப்புணர்வு முகாமில் பாத்திமா மருத்துவமனை மகப்பேறு நிபுணர் டாக்டர் ரொகையா கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
.இதில் 50 பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.