திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றும் நாளையும் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச கருத்தரங்கை ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி ஆங்கிலத்துறை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சர்வதேச கருத்தரங்கில் ஆஸ்திரேலியா,
,ஓமன், ஹைதராபாத் மற்றும் திருச்சியை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உரையாற்றினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு இதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் அம்மங்கி.வ . பாலாஜி தலைமையில், கல்லூரியின் முதல்வர் முனைவர்.
பிச்சைமணி, துணை முதல்வர் முனைவர்.சத்திய நாராயணன், கலைப்புல முதன்மையர் முனைவர் லட்சுமி, துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயச்சந்திரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

