திருச்சி .பாபுரோடு சுகதாஸ் மண்டி தெருவில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில், ரோட்டில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வர்த்தக பிரிவு மாநில செயலாளர் எம்.பி.முரளிதரன், மாநிலச் செயலாளர் பார்வதி நடராஜன். தலைமையிலும், மண்டல் தலைவர்கள் மகேந்திரன், சதீஷ் குமார் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.இதில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராம்குமார், துணைத் தலைவர் ராஜ்குமார், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், வர்த்தக பிரிவு மண்டல் தலைவர்கள் பரமேஸ்வரன், சரவணன், மலைக்கோட்டை பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பாக பாபு ரோட்டில் உள்ள அன்பு மகாலில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு எம்.பி.முரளிதரன் தலைமையில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.