மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி:
திருச்சி மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றது
மாவட்ட அளவிலான ஏரோஸ்கேட்டோபால் விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்கத் தலைவர் இராகேஷ்சுப்பிரமணியன் தலைமையில், செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் முன்னிலையில் நடைபெற்றது.
விளையாட்டு போட்டியில் திருச்சி, திண்டுக்கல், கரூர்,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு,சிவகங்கை,மதுரை, அரியலூர் என பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்து கொண்டு ஏரோஸ்கேட்டோபால்,
ரோலர் பேஸ்கட் பால், மற்றும் ஸ்பீடு ஸ்கேட்டிங், போட்டியில் கலந்து கொண்டு மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
விளையாட்டு போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாவட்டத்திற்கு ரூபாய் 20000, இரண்டாம் இடம் பிடிக்கும் மாவட்டத்திற்கு ரூபாய் 15,000 மூன்றாம் இடம் பிடிக்கும் மாவட்டத்திற்கு
ரூபாய் 10,000 என பரிசு தொகைகள்,கோப்பைகள்,
மற்றும் சான்றிதழ்களை முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் ஓவர் ஆல் சாம்பியன் திருச்சி மாவட்டம் முதலிடம், திண்டுக்கல் மாவட்டம் இரண்டாவது இடம் , கள்ளக்குறிச்சி மாவட்டம் மூன்றாவது இடம், சிவகங்கை மாவட்டம் நான்காவது இடமும் பிடித்து ஓவரால் சாம்பியன் கோப்பைகளை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.