மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதாரமற்ற நிலை.உடனே அப்புறப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றத்துடன் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மலைக்கோட்டை அருகே அமைந்துள்ளது தாயுமான சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம். இக்குளத்தில் அவ்வப்போது குறிப்பாக கோடை காலங்களில் மீன்கள் செத்து மிதப்பதும் பின்னர் அவற்றை மாநகராட்சியினர், கோயில் நிர்வாகத்துடன் இணைந்து அப்புறப்படுத்துவதும் வாடிக்கை.
அளவுக்கதிகமான வெப்பத்தால் மீன்கள் இறப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் நிகழாண்டு கோடை முடிந்து, பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றன.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தெப்பக்குளத்தில் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.