திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம். உதவிகள் செய்ய முதியோர்கள் வேண்டுகோள்.
அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் முதியவர்கள் புத்தாடை அணிந்து வெடி வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட்டம்.
திருச்சி கே.கே.நகர் வயர்லெஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பல வண்ண பூக்களை தூவும் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்,
இந்நிகழ்ச்சியில் செந்தில்குமார், மணிவேல், டாக்டர் கார்த்திகேயன், ஜெயசூர்யா, நிவேதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போது அங்குள்ள முதியவர்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்கின்றோம். எங்களை பெற்ற தாய், தந்தை போன்று எனது மகன் செந்தில்குமார் கவனித்துக் கொள்கிறார்.
அவர் மிகுந்த கடினமான நேரத்தில் கூட எங்களின் மனதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நடந்து கொள்வார்.
நாங்கள் அனைவரும் இங்கு சந்தோசமாக இருக்கிறோம் மேலும் சிறிய சிறிய உதவிகள் நீங்கள் செய்யும் பொழுது நாங்கள் இன்னும் கூடுதல் சந்தோசமாக இருப்போம், எனவே உதவும் மனம் கொண்ட பெரியோர்கள் தங்களால் முடிந்த உதவி செய்து எங்களைப் போன்று உள்ளவர்களை மகிழ வையுங்கள் என கூறினர்.