Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிலம்பத்தில் பல உலக சாதனை படைத்து வரும் சுகித்தாவிற்கு இளமணி விருது. மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

0

சிலம்பத்தில் பல வெற்றிகள் மற்றும் பல புதிய உலக சாதனை படைத்த மோ.பி.சுகித்தாவிற்கு திருச்சி ஆட்சித்தலைவர் அவர்களிடத்தில் கலை இளமணி விருது.

செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகும்பு படிக்கும் மாணவி மோ.பி.சுகித்தாவிற்கு தமிழக அரசு கலை பண்பாட்டு்த் துறை சார்பாக தமிழக அரசு ஆண்டுதோறும் மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கலைஞர்களை மாவட்டந்தோறும் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டபட்டு அதில் திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய நடைபெற்ற கலைஞர்கள் தேர்வு குழு கூட்டத்தில் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


அதில் தமிழர்களின் பாரம்பர்ய கலையான சிலம்பத்தில் இளம் வயதில் சிறந்து விளங்கும் மோ.பி. சுகிதாவிற்கு கலை இளமணி விருதினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் வழங்கினார்.

உடன் திருச்சி மாவட்ட கலைமன்றத்தின் செயலர் சி.நீலமேகன் இருந்தார்கள்.

மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் 15 ம் தேதியன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 76 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி இந்தியா புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சான்றிதழை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் காண்பித்து பாராட்டும் பெற்றார்.

14 வயதேயான மோ.பி.சுகித்தா சிலம்பத்தில் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றதும் அல்லாமல் சிலம்பத்தில் பல புதிய உலக சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.