திருச்சி 47 வது வார்டு கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ரோடுகளின் நடுவில் நீச்சல் குளங்கள் உபயம் பாதாள சாக்கடை எல்&டி ஒப்பந்தக்காரர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை என்ற பெயரில், ஒப்பந்தக்காரர்களின் அலட்சியமான, சிந்துபாத் தொடரை மிஞ்சிய வேலைகள்.
வீட்டு வரி , சாலை வரி என்று எண்ணற்ற வரிக்கட்டும் மக்களை காவு வாங்கக்கூடிய அபாயகரமான குழிகள்.
முதியவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் நாள்தோறும் சாலைகளில் உள்ள குழிகளில் விழுந்து காயத்துடன் சென்று வருகின்றனர்.
உயிர் காவு வாங்கும் முன்பு இப்ப பணிகளை முடிப்பார்களா? என 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.