Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக 51 -ஆம் ஆண்டு துவக்க விழா:திருச்சி தெற்கு மாவட்டத்தில் குமார் தலைமையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

0

 

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகபொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்..

அஇஅதிமுக கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்

ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கலந்து கொண்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ராவணன் ,தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் சுபத்ரா தேவி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, முன்னாள் அரசு வழக்கறிஞர் சின்னத்துரை, வட்ட கழக செயலாளர் ராஜா, அரியமங்கலம் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஜெயசீலன், கோபிநாத், செல்வன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்கள் கதிரவன், சரவணன், கோதை ராஜ், ப.சத்ரியன், பகுதி செயலாளர் ரமேஷ்குமார், லால்குடி நகர செயலாளர் பிரசன்னா, மற்றும் ஓரந்தை ஜெயராஜ், ரபீக், துவக்குடி தமிழ் மணி, மணவை விஜய், ராஜு, ஹரீஷ், கமலேஷ், ஜீவராஜ், பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து தொடர்ந்து திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் செய்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.