தஞ்சையில் ஏரிகளுக்கு பாசன நீர் விரைந்து கிடைக்க அனைத்துக் கட்சியினர் மனு.
தஞ்சையில் ஏரிகளுக்கு பாசன நீர் விரைந்து கிடைக்க அனைத்துக் கட்சியினர் மனு.
தஞ்சாவூரில் உள்ள ஏரிகளுக்கு பாசன நீர் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து கட்சியினர் பொதுப்பணி துறை தலைமை பொறியாளரிடம் மனு.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ம் தேதி மாயனூரில் உள்ள கட்டளை வாய்க்காலில் பாசன நீர் திறக்கப்பட்டது.அந்த நீர் இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு வரவில்லை.அதனால் விவசாய பணிகள்,நாற்று விடும் பணிகள் போன்றவற்றை விவசாயிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.எனவே தஞ்சாவூரில் உள்ள ஏரிகளுக்கு பாசன நீர் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் தி.மு.க மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்ட மன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகரன் தலைமையில் அனைத்து கட்சியினர் திருச்சியில் உள்ள பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய் அன்று கோரிக்கை மனு அளித்தனர்.
அவருடன்,சி.பி.எம் மாவட்ட செயலாளர் நீலமேகம் சி.பி.ஐ, மாவட்ட செயலாளர் பாரதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தமிழ் மாநில காங்கிரஸ் குணா , விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் உடனிருந்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் :
கடந்த 8 ஆண்டுகளாகவே உரிய நேரத்தில் தஞ்சாவூரில் பாசனத்திற்கு நீர் கிடைப்பதில்லை எனவே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.அதே போல நீர் நிலைகள் தூர்வாரப்படுவதாக ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.ஆனால் அதில் உண்மையில்லை,முறையாக நீர் நிலைகள் தூர்வாரப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.