திருச்சியில் என்.ஜி.ஓஸ் பெடரேஷன் திருச்சிராப்பள்ளி என்ற புதிய அமைப்பு தொடக்கம்.
திருச்சியில் என்.ஜி.ஓஸ் பெடரேஷன் திருச்சிராப்பள்ளி என்ற புதிய அமைப்பு தொடக்கம்.
மாவட்ட அளவில் சேவை செய்த தமிழ்க்கல்வியும் பதிவு பெற்ற அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைத்து அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு (NGO’s FEDERATION TRICHIRAPPALLAI) உருவாக்கப்பட்டுள்ளது.
சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பின் முதல் கூட்டம் திருச்சி பெமினா ஹோட்டலில் இவ்அமைப்பின் தலைவர் C.R.ராஜா (ஹீடு இந்தியா தொண்டு நிறுவனம் செயல் இயக்குனர்) தலைமையில் நடைபெற்றது.
ராஜா இந்த அமைப்பின் நோக்கம் குறித்து பேசியபோது :
மாவட்ட அளவில் அரசு துணையாக அரசு திட்டங்களை அரசுடன் இணைந்து செயல்படுத்துவது,
திருச்சி மாவட்டத்தின் வரலாறு பண்பாடு கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை மீட்டெடுத்து அதன் பெருமைகளை வெளிக் கொண்டு வருவது மற்றும் பேணிக்காப்பது,
சுயசார்பு பொருளாதாரம், சுயதொழில் மற்றும் திருச்சி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மாவட்டத்திலேயே தொழில் முனைவோராக உருவாக்கி சிறந்த தொழில் நகரமாக மாற்ற பாடுபடுவது,
சிறந்த முறையில் சேவை செய்யும் தன்னார்வலர்களையும், அரசு சாரா அமைப்புகளையும் அரசு நிறுவனங்கள் மூலம் அங்கீகாரம் கிடைக்க பாடுபடுவது,
உள்ளிட்ட பல்வேறு நோக்கங்கள் குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில் பொது செயலாளர் வில்பர்ட் எடிசன் ( கண்மலை அறக்கட்டளை நிறுவனத்தலைவர்), பொருளாளர் அன்பழகன் (WORD TRUST மேனேஜிங் டைரக்டர்) துணைத்தலைவர் கவிதா ( கவி சமூக நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ) , இணை செயலாளர் உமா மகேஸ்வரி ( புது சுவாசம் அறக்கட்டளை பொது செயலாளர்) செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் ( அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ) மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோ.வி. கார்த்திக், அஸ்லாம்,சிவப்பிரகாசம், அரிகிருஷ்ணன் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.