திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியப் பெருமக்களிடம் வாக்குகள் சேகரித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிவாசல்களில், மதச்சார்பற்ற கூட்டணிக் வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

பெல் (BHEL) பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள டவுன்ஷிப் பள்ளிவாசல்.
ஐ.டி.ஐ (ITI) அருகே உள்ள மதரஸ்த்துல்லா பஷீரய்யா பள்ளிவாசல்.
காந்திநகர் சாலையில் உள்ள நூர் பள்ளிவாசல்களில் அமைச்சர் அவர்கள் இன்று சென்று, தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டினார்..
முக்கிய வாக்குறுதிகள் மற்றும் சாதனைகள்

வாக்கு சேகரிப்பின் போது, திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார்:
மகளிருக்கான இலவசப் பேருந்து வசதி.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.
இந்த நிகழ்வின் போது மாநகரச் செயலாளர் மதிவாணன், துவாக்குடி நகரச் செயலாளர் காயாம்பு, பெல் தொ.மு.ச. பொதுச் செயலாளர் தீபன், வட்டச் செயலாளர்கள் கருணாகரன், அப்பு (எ) கருணாநிதி, குத்தூஸ், அசாருதீன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் உடனிருந்தனர்.

