Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்

0

'- Advertisement -

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Ad banner

திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள தேவராயனேரி மற்றும் நரிக்குறவர் காலனி, அதேபோல் வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள வாழவந்தான்கோட்டை கிராமம் மற்றும் குங்குமபுரம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:

“தமிழக முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற உன்னதமான திட்டங்களை மக்களுக்காகச் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக, இல்லத்தரசிகளுக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் நான் முதல்வன் திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களைத் தந்துள்ளார்.

மக்களின் நலன் காக்கும் இந்த நல்லாட்சி தொடரவும், உங்கள் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடரவும், பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.”இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது கட்சி நிர்வாகிகள், கே என் சேகரன்,

கே எஸ் எம் கருணாநிதி, பழனியப்பன், குத்தூஸ், ஸ்ரீநிதி சதீஷ், கோவிந்தராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.