Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் சிக்கியது.ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பணமா?

0

'- Advertisement -

திருச்சி அருகே ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பிரமுகர் வீட்டில் ரூ. 11 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்து உள்ளனர்.

 

Ad banner

திருச்சி அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதியில் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக பிரமுகருமான காந்தி (வயது 65) என்பவரது வீட்டில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி சந்திரமௌலி, வருமான வரித்துறை அதிகாரி கதிரவன் உள்ளிட்டோர் அம்மாபேட்டை காளியம்மன் கோயில் தெருவில் உள்ள காந்தியின் வீட்டிலும், அவரது மகன்கள் வீட்டிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்

அப்போது காந்தி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம், 2 மகன்கள் வீட்டிலிருந்தும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 11 லட்சத்தை பறிமுதல் செய்து, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இந்த பணம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் துரைராஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும்,வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்றும் கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.