திருச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற 100% வாக்களிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற 100% வாக்களிப்பது குறித்து
பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பாக ரங்கோலி கோலம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் துணை ஆணையர்கள் பாலு, வினோத், உதவி ஆணையர் செண்ணுகிருஷ்ணன்
உதவி திட்ட அலுவலர் சுரேஷ், உதவி வருவாய் அலுவலர் தாமோதரன் மற்றும் மகளிர் சுய உதவி குழு அமைப்புகள் கலந்து கொண்டனர்.

