திமுக ஆட்சிக்கு நற்சான்றுக்கு உதாரணமாக அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் அதிமுக, தவெக மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் தங்களை திமுகவில் இனைத்துக் கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநகர செயலாளர் மு.மதிவாணன் ஏற்பாட்டில் முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் நவல்பட்டு ரவி
பகுதி செயலாளர் டி பி எஸ் ராஜ் முகமது ஏற்பாட்டில் அஇதிமுக வட்டச் செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்தார் .
மேலும் ஆ மு மு க-விலிருந்து விலகி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திமுக இணைந்த நிர்வாகிகள்.
திராவிட மாடல் ஆட்சியின் நற்சான்று உதாரணமாக மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்
ஆ மு மு க கட்சியில் இருந்து விலகி கார்த்திக், ராம்குமார் ஆகியோர் தங்களை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தலைவரின் சீரிய தலைமையில், அமைச்சரின் வழிகாட்டுதலின்படி திமுகவின் வளர்ச்சிக்கும், திருச்சி தெற்கு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக இணைந்த நிர்வாகிகள் உறுதி ஏற்றனர்.
புதிதாக கழகத்தில் இணைந்த கார்த்திக் மற்றும் ராம்குமார் ஆகியோரை அமைச்சர் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

