விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று உயிரிழந்த கல்லூரி மாணவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர் விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அன்று (24/03/25) செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் கடந்த நான்காம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் சாலை மார்க்கம் வழியாக திருச்சியில் இருந்து தஞ்சை சென்றார்.
அப்போது இளைஞர்கள், கட்சித் தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.
இதில்
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் விக்னேஷ் (வயது 20), மற்றும் அவரது நண்பர் அருண் (வயது 21) ஆகியோர், தங்களது டூவீலரில் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் உடன் பயணித்த அவரது நண்பர் அருணுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விக்னேஷ் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விக்னேஷ் அங்கிருந்து டிரஸ்சார்ஜ் செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் கடந்த 23ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .
இதனைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை (25/03/25) அவரது இல்லத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல் கூறினார்.

