Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேற்கு தொகுதி திமுக கோட்டை என்பதை மாற்றி அமைக்கக்கூடிய தீரம் மிக்கவர் அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மட்டுமே

0

'- Advertisement -

திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களின் திமுக சார்பில் போட்டியிட்டு அமைச்சராக செயல்பட்டு வருபவர் கே.என்.நேரு.

 

வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் மேற்கு தொகுதியில் திமுக சார்பில் கே என் நேரு தான் போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.ஏற்கனவே தீபாவளி, ரம்ஜான் பண்டிகை நேரத்தில் பரிசுகளை அள்ளி வீசி உள்ளார்.நேருவின் வெற்றி உறுதி என கூறப்பட்டு வரும் நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் என்.டி.ஏ கூட்டணியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள ஒருவர் பெயரை கூறுங்கள் என திருச்சி மக்களிடம் கேட்டால் திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனை தான் கூறுவார்கள்.அனைவரும் அறிந்த பிரமுகர்.

 

திருச்சியில் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் அபார வெற்றி பெற்றார்.வெற்றி பெறுவது முக்கியமில்லை என தினந்தோறும் வார்டு முழுவதும் தெரு தெருவாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்தார்.அதேபோல் மாதம்தோறும் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் தனது வார்டு முன்னேற்றத்துக்காக பேசியவர் செந்தில்நாதன் மட்டும்தான்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டு ஒரு லட்சம் ஓட்டுகள் மேல் வாங்கியவர்.

 

திருச்சி முழுவதும் நன்கு பரிச்சயமானவர்,அவர் மாமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது வார்டு மக்கள் மட்டுமில்லாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளராக திருச்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று (சரியில்லாத சாலைகள்,மழைநீர் தேங்கிய இடங்கள்,குப்பைகள் அகற்ற படாத இடங்கள் இதுபோன்று) மக்களுடன் மக்களாகச் சென்று மக்கள் பணியாற்றியதால் பொதுமக்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சியமானவர்கள் .

 

மேற்கு தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத பல்வேறு கட்சிகளுக்கு சென்று தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பதை தவிர்த்து செந்தில்நாதனுக்கு மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் தரமான களப்பணி ஆற்றி எதிர்த்து நிற்பவர் யாராக இருந்தாலும் வெற்றி பெறுவார்.

 

பூத் கமிட்டி நிர்வாகிகள் (அமமுக மற்றும் அதிமுக) அனைவரும் செந்தில் நாதனுக்கு பரிச்சயமானவர்கள் .மேற்கு தொகுதி திமுக கோட்டை என்பதை மாற்றி அமைக்கக்கூடிய தீரம் மிக்கவர் அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மட்டுமே என மேற்குத் தொகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்.எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் செந்தில்நாதன் களமிறக்கப்படுவாரா என தொகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.