திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கிய பழனியாண்டி எம் எல் ஏ.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி .
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இன்று காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார்.
உயர்வகையைச் சேர்ந்த அபூர்வ வகையை சேர்ந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இன்று காலை கோயிலுக்கு நேரில் கொண்டு வந்தார்.
பின்னர் கோயிலின் அர்ச்சகர்கள் முன்னிலையில், அந்தப் பசுவிற்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
பூஜைகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, பசுமாட்டினை கோயில் அதிகாரிகளிடம் அவர் முறைப்படி ஒப்படைத்தார்.

ஆன்மீக ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் காரம்பசுவின் (கருநிறப் பசு) பால் மற்றும் அதன் வழிபாடுகள் மிகவும் புனிதமானதாகவும், விசேஷமானதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பசுவை கோயிலுக்குத் தானமாக வழங்குவதால் அரசியலில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.
அரசியல் இல்லாமல் இதனை எதிர் நோக்கினால் எம்.எல்.ஏ செய்த நிகழ்வு பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

