மண்ணச்சநல்லூர் திமுக முக்கிய நிர்வாகிகள் 5 நபர்களுக்கு சொகுசு கார்கள் பரிசாக வழங்கிய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் மீதும் புகார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்-2026 வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.3.2026 ஆம் தேதி மாலையிலிருந்து அமலுக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் S.கதிரவன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நடைமுறை விதிமுறைகளை மீறி 16.3.2026 மற்றும் 17.3.2026- ஆகிய தேதிகளில் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக ஒன்றிய செயலாளர்களான காட்டுக்குளம் கணேசன், ராமச்சந்திரன், செந்தில்குமார், செந்தில் கார்த்திகேயன், சீனிவாச பெருமாள் மற்றும் பேரூர் திமுக செயலாளர்களான ராஜசேகரன் மற்றும் மனோகரன் ஆகியோருக்கு புதியதாக “Mahindra Scorpio N” என்ற நான்கு சக்கர உயரக சொகுசு கார்களை எம்எல்ஏ கதிரவன் மற்றும் அவரின் தந்தை சீனிவாசன் ஆகிய இருவரும் சேர்ந்து பரிசாக வழங்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் காரை பரிசாக வழங்கியதை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.கதிரவன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
எனவே அவர் மீது தேர்தல் நடைமுறை விதிகளை மீறிய குற்றத்திற்குகாக எம்எல்ஏ கதிரவன் மீதும் தந்தை சீனிவாசன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஏவூர் .நாகராஜன் தேர்தல் நடத்தும் அலுவலரும் திருச்சி மாவட்ட ஆட்சியரான சரவணனிடம் புகார் மனு அளித்து உள்ளார். அந்த மனுவில் திமுக சார்பில் இதுவரை வேட்பாளராக கதிரவன் அறிவிக்கப்படாத நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு 15 முதல் 20 லட்சம் வரை மதிப்புள்ள சொகுசு கார்களை பரிசாக வழங்குகிறார் என்றால் வேட்பாளர் பெயர் அறிவித்த பிறகு நிர்வாகிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் எவ்வளவு கோடி கோடியாக பரிசுகளை வழங்குவார் என்பது தெரியவில்லை, எனவே சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சரவணன் வேட்பாளர் பெயர் பட்டியல் இதுவரை வெளியிடாத நிலையில் பரிசு பொருட்கள், கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் இவை அனைத்தும் வேட்பாளர் செலவின கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்ததுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவேதன லட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி கிட்னி திருட்டில் ஆதாரத்துடன் சீக்கியும் வழக்கிலிருந்து வெளிவந்து விட்டனர்.
தற்போது மார்ச் 9ஆம் தேதி சிறுகனூரில் நடைபெற்ற திமுகவின் பன்னிரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் தங்குவதற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 5 நட்சத்திர ஹோட்டல் போன்று மாற்றம் செய்து ஏற்பாடு செய்த கதிரவன் தனக்குத்தான் மீண்டும் தான் தான் மணச்சநல்லூர் தொகுதி என நம்புவதால் வேட்பாளர் பேர் அறிவித்தவுடன் மீண்டும் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் விலை உயர்ந்த கார் பரிசாக வழங்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.கடந்த ஐந்து வருடமாக தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாத கதிரவன் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்வது மணச்சநல்லூர் தொகுதி பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் எத்தனை கோடி பரிசு பொருட்களை கொடுத்தாலும் தேர்தல் ஆணையத்தால் என்னை ஒன்றும் புடுங்க முடியாது என்ற தைரியத்தில் கார் வழங்கிய படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார் கதிரவன் எம்எல்ஏ.
இதையெல்லாம் மீறி நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் ?

